Breaking
Fri. May 17th, 2024
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக, இன்னும் மூன்று மாத காலங்களின் பின்னர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு இலங்கை மீன் வகைகள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடி மற்றும் கடற்றொழில் விவகார ஆணையாளர் மாரியா தமனகி (Maria Damanaki) தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு எச்சரிக்கை கடிதமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்திருந்ததாக மாரியா தமனகி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலான சர்வதேச சட்டங்களை இலங்கை மீனவர்கள் பின்பற்றுவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையிலிருந்து வருடாந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 74 மில்லியன் யூரோ பெறுமதியான மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது தட்டில் இருக்கும் உணவு எவ்வாறு கிடைக்கப் பெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள சகல ஐரோப்பிய பிரஜைகளுக்கும் உரிமை இருப்பதாக மாரியா மேலும் குறிப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் 3 மாதங்களில் நிறைவேற்றப்படும்- இலங்கை
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக​ள் மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைககளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு இலங்கை மீன் வகைகள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடி மற்றும் கடற்றொழில் விவகார ஆணையாளர் மாரியா தமனகி தெரிவித்துள்ளார்.
இன்னும் மூன்று மாத காலங்களின் பின்னர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு உறுதி அளித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *