Breaking
Tue. May 14th, 2024

இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி அவர்கள் இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்றும் இஸ்லாமிய மார்கத்தில் ஆண்கள் தான் அப்பாவிகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் எண்ணுவது போல் இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக முதலில் தாம் எண்ணியதாக கூறும் சூயி சில மாதங்கள் சவுதி அரேபியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்த போது தான் தனது கருத்தை மாற்றி கொள்ள நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண்களின் வாழ்கை முறையை தான் நேரில் பார்த்த பிறகு அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதையும் பாக்கியம் நிறைந்தவர்கள் என்பதையும் தாம் உணர்ந்து கொண்டதாக கூறும் அவர்

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்காக ஆண்கள் அதிக சிரத்தை எடுத்து கொள்கினறனர் பகல் முழுவதும் அலுவலங்களில் வேலை செய்யும் முஸ்லிம்கள் மாலை நேரம் வீடு திரும்பியதும் தனது பணி கழைப்புகளினால் ஓய்ந்து விடாமல் தமது மனைவியர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்து செல்வதையும் காண முடிகிறது இது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு எந்த சுமைகளையும் தந்துவிடாமல் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சுமைகளையும் மகிழ்வோடு ஆண்களே ஏற்று கொள்வது என்னை வெகுவாக கவர்ந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *