Breaking
Fri. May 17th, 2024

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக (P.T.A.), பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை(C.T.A)–((Counter Terrorism Act))கொண்டுவர உத்தேசித்துள்ளது. இப்புதிய சட்டம் தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்க்கும்,உத்தேசித்துள்ள புதிய சட்டத்திற்குமிடையில் (C.T.A.) எந்தவித வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. புதிய சட்டத்திற்கான முயற்ச்சிகளை முதன் முதலில் எதிர்த்தவர் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.அவரது முயற்சி தொடர வேண்டுமென்றும் விரும்புகின்றோம்.                                           

உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது முஸ்லீம்களை இலக்காக வைத்து இயற்றப்படுகின்றதா? என்ற சந்தேகம் முஸ்லீம் சமூகத்திற்க்கு மத்தியில் எழுந்துள்ளதாகத் தெரிகின்றது.எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து உன்னிப்பாக இருப்பது மிக முக்கியமாகும், என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் ஹாஜியார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *