Breaking
Fri. Dec 19th, 2025

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அமைச்சர்கள் – அமைச்சுக்கள் விபரம் வருமாறு –

சசீந்ர ராஜபக்ஷ – நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமாண அமைச்சர்.

செந்தில் தொண்டமான் – வீதி அபிவிருத்தி, வீடு, நீர்வள மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்.

அநுர விதானகமகே – விவசாய, நீர்பாசன, விலங்கு உற்பத்தி, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

சாமர சம்பத் தஸநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், மின்சார எரிசக்தி, சிறு கைத்தொழில் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்.

குமாரசிறி ரத்நாயக்க – சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகார அமைச்சர்.

எது எவ்வாறு இருப்பினும் உபதலைவராக நியமிக்கப்பட்ட சாலிய சுமேத தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post