Breaking
Mon. Apr 29th, 2024

அஸ்ரப் ஏ சமத்

ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது

இங்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்

தற்பொழுது ஜ.தே.கட்சி மட்டும் இம்முறை வாக்கு கேட்கவில்லை. ஜ.தே.முன்னணி என்ற அமைப்பில் பாட்டலி சம்பிக்க, எம்.டி.எஸ் குணவா்த்தன, அர்ஜூன ரணதுங்க ராஜித்த சேனாரத்தின முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாம்பரம். மனோகனேசன் மற்றும் 167 சமுக அமைப்புக்கள் இணைந்து ஜக்கிய தேசிய முன்னணி அமைத்து இப் பாராளுமன்றத் தோ்தலில் குதித்துள்ளோம்.

இந்த நாட்டை திடம்பர சக்திமிக்க பொருளாதார வளம் கொண்ட நாடாக கொண்டுசெல்வதற்கும். இந்தியாவின் சென்னை போன்று ஆக்குவதற்கும் இந்த மேல்மாகணத்தை உள்ளுராட்சிகளை சபைகளை மாநரகமாக்கி ஒரு தெற்காசியா விலேயே ஒருசிறந்த நாடாக மாற்றுவதற்கு எனக்கு 130க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெறுவதற்கு எனக்கு சா்ந்தா்ப்பமொன்றைத் மக்களாகிய நீங்கள் எனக்கு தாருங்கள்.

அடுத்த 8 மாதாங்களுக்குள் இந்த நாட்டை நான் திடம்பட கொண்டுசெல்வேன். சீனா அரசாங்கம் ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் இயந்திரப் படகுகள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அதே போன்று வாகணஙக்ளை இலங்கை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். கொழும்பு கம்பஹா ஹம்பாந்தோட்டைப்பிரதேசத்தில் வெளிநாட்டு முலதனத்துடன் தொழில் பேட்டை கள் நிறுவ உள்ளேன்.கனனிகள் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்படும்.

இதன் முலம் 10 இலட்சம் பேருக்கு 5 வருடத்திற்குள் தொழில் வழங்கும் திட்ட ஒன்று உள்ளது. 50 ஆயிரம் வீடுகளை வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்குதல்.

GOOGLE நிறுவனத்துடன் முழு இலங்கையிலும் உள்ள வீடுகளில் இலவசமாக இன்னெட் பாவிப்பதற்கான யுகம் கொண்டுவரப்பட உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *