Breaking
Thu. May 9th, 2024
நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயங்கள் எது பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியினருடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தேர்தலில் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை குறித்து சுமூகமாக அவருடன் பேச தயாராக இருப்பதாக நான் கூறியுள்ளேன் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *