Breaking
Mon. May 20th, 2024

பலரும் இஸ்லாம் அராபிய கலாசாரத்தை புகுத்துகிறது என்று கூறுகின்றனர். உண்மையில் அராபிய கலாசாரம் என்பது வேறு: இஸ்லாம் என்பது வேறு: அராபியர்கள் நீண்ட ‘தோப்’ என்ற உடையை உடுத்துவார்கள். வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள்.

மதுவுக்கும் விபசாரத்துக்கும் அன்றைய அரபு சமூகம் அடிமைப்பட்டுக் கிடந்தது. பெரும் பெரும் கத்திகளை வைத்துக் கொண்டு இசையுடன் நாட்டுப் புற பாடல்களை பாடிக்கொண்டு நடனமும் ஆடுவார்கள்.

குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் என்பது இன்றும் நடந்து வருகிறது. ‘குப்ஸ்’ எனும் ரொட்டிதான் அராபிய கலாசார உணவாகும். இவை எல்லாம் அராபியக் கலாசாரங்கள் என்று அறியப்படுபவை.

ஆனால், ஒரு இஸ்லாமியன் இதில் எதனையுமே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குர்ஆனிலோ நபி மொழிகளிலோ இவற்றை எல்லாம் பின்பற்றுங்கள் என்ற எந்த அறிவிப்பும் இல்லை.

எனவேதான், உலகின் எந்த கோடியில் உள்ள மனிதனும் குர்ஆனை ஒரு வரியைக் கூட ஒதுக்காமல் தனது வாழ்வில் பின்பற்ற முடிகிறது. இந்த ஐரோப்பிய குடும்பத்தில் உள்ள முகங்களை பாருங்கள்.

அராபிய கலாசாரத்துக்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? பூனைக் கண், மஞ்சள் நிறம், வெள்ளை முடி, உணவு பழக்க வழக்கம், கலாசார பழக்க வழக்கங்கள் என்று எதிலுமே ஒத்து வராத ஐரோப்பிய குடும்பமும் மனம் உவந்து இஸ்லாத்தில் ஐக்கியமாகிறது என்றால் அதனை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். அராபிய கலாசாரத்தை இஸ்லாம் போதித்திருந்தால் இன்று இந்த குடும்பத்தை இஸ்லாம் ஈர்த்திருக்காது. அரைகுறை ஆடையோடு பல ஆண்களோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இப்படியும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்று ஆச்சரியப்படுகிறோம்.

இறைவன் இந்த குடும்பத்தை குர்ஆனின் கட்டளைகளை வாழ்வின் அனைத்து துறைகளிலும் பின்பற்றக் கூடியவர்களாக ஆக்கி அருள் புரிவானாக!

“அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.”

குர்ஆன் 110:1,2,3

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *