Breaking
Mon. Apr 29th, 2024

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

அடுத்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க. ஆட்சியின் கீழ் 20 தாவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கி நிறைவேற்றுவதாக ஐ. தே. க செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க. ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

20 ஆவது தேர்தல் திருத்தம் குறித்த ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் கூறியதாவது,

தொகுதி வாரி முறையில் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதனால் உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. இதனையடுத்து விகிதாசார முறைகொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த முறையினூடாக எம். பிக்கள் தெரிவாகவில்லை. பணம் விரயமாக் கப்பட்டது. இந்த முறையை கொண்டு வந்த ஐ. தே. க இதனை மாற்றவேண்டும் என தீர்மானம் செய்தது. ஐ. தே. க ஆட்சியில் தினேஷ் குணவர்தன தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 225 எம். பிக்கள் தொகை அதிகரிக்கப்படுவதை 2001 முதல் ஐ. தே. க எதிர்த்தது.

100 நாள் திட்ட வாக்குறுதியில் தேர்தல் மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம். கலப்பு முறைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். எம்.பிக்கள் தொகை அதிகரிப்பதை நாம் எதிர்க்கிறோம்.

 20 ஆவது திருத்தம் குறித்து எதிர் தரப்பு 20 வருடமாக பேசவில்லை உண்மையான நோக்கத்துடன் எதிர்தரப்பு 20 குறித்து பேசவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யவே மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஆதரவான குழு 20 குறித்து பேசு கிறது. இக்காலப் பகுதியிலே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

20 ஆவது திருத்தத்துக்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணைகளை விவா தத்திற்கு எடுக்க எதிர்தரப்பு முயன்றது. 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணைகளை வாபஸ் பெற வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் ஐ. தே. க ஆட்சியில் 20 ஆவது திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றப்படும். தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் சில அம்சங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

எம்.பிக்கள் தொகை 225 ஐ விட அதிகரிக்க கூடாது. மக்களுக்கு இலகுவான தேர்தல் முறை கொண்டுவரப்பட வேண்டும். கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படல், ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு கூறும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுதல், விருப்பு வாக்கு முறையை ரத்துச் செய்தல், கலாசார, இன விகிதாசாரபடி உறுப்பினர்களை தெரிவு செய்யும் விகிதாசார முறையினூடாக சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் அபிலாஷைகளை உறுதிப்படுத்துதல், உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரே விதமான தேர்தல் முறையை அமுல்படுத்துதல், வேட்பாளர்களின் தேர்தல் செலவை மட்டுப்படுத்துதல், ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக தேர்தல் மறுசீரமைப்பு அமைய வேண்டும் என்பது எமது கட்சி நிலைப்பா டாகும்.

புதிய தேர்தல் மறுசீரமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை பெற்று புதிய தேர்தல் முறை அமைக்கப்படும். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *