Breaking
Tue. May 7th, 2024
(Inamullah Masihudeen)
தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொது சபை மாநாட்டில் நேற்று உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரஜப் தயிப் அர்டோகான் எகிப்தின் சதிப்புரட்சி அரசினை சாடியதோடு பார்வையாளர்களாக இருக்கும் சர்வதேச பிராந்திய சக்திகளையும் அக்கிரமத்தின் பங்காளிகளாக வர்ணித்தார்.
பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்து, மக்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களை கனரக ஆயுதங்கள் கொண்டு அடக்கி எகிப்தின் சட்டபூர்வமான அரசை கவிழ்த்து ஜனாதிபதியையும் ஏனைய நூற்றுக்கணக்கான தலைவர்களையும் சிறையில் தள்ளியுள்ள சதிப் புரட்சியை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருப்பின் ஐக்கிய நாடுகள் தாபனம் இல்லையென்றே கருதப்படல் வேண்டும், சரவதேச சமூகம் ஜனநாயக சக்திகளை மதிக்கிறதா அல்லது படுகொலைகள் வன்முறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் சதிப்புரட்சிகளை மதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிய பொழுது தனது கையினால் “ராபியா” அடையாளத்தை காட்டி உரை நிகழத்தினார்.
அதேவேளை எகிப்தின் சதிப்புரட்சி இராணுவ சர்வாதிகாரி சீஸி உரையாற்றும் பொழுது வெளிநடப்புச் செய்யும் உலகத் தலைவர்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஐ நாவுக்கான ஸீ ஸி அரசின் பிரதிநிதி அம்ரு பத்திரிகையாளரிடம் தெரிவித்து சர்ச்சை ஒன்றை கிளப்பியிருந்தார்.
சகோதரத்துவ அமைப்பினரை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதி களாகவும் குற்றமா சாட்டிய ஸீ ஸீ பயங்கரவாதத்திற்கு எதிராக தனக்கு உதவுமாறும் உச்சரிப்பு பிழைகளுடன் கூடிய தனது உரையில் தெரிவித்துள்ளார், பாலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் மற்றும் ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் தவிர்ந்த வேறு எந்த நாட்டுத் தலைவரும் ஸீ ஸீ யை சந்திக்க முன்வரவில்லையாம். அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளும் முயற்சிகளும் இதுவரை கைகூடாத நிலையிலும் ஒபாமா அவசரமாக தன்னை சந்திக்க விரும்புவதாக எகிப்திய ஊதகங்களுக்கு தலைப்புச் செய்தி தெரிவித்துள்ளாராம்.
நியூயோர்க்கில் அதிக விலை கூடிய ஹோட்டலான நியூ யோர்க் பலஸில் ஒரு இரவிற்கு அறைக்கு மாத்திரம் $15,000 அமெரிக்க டாலர்களை ஸீ ஸீ செலவிடுவதாகவும், பொருளாதார நெருக்கடியில் உள்ள எகிப்திற்கு பத்து இலட்சத்து முப்பதாயிரம் ஜுனைஹ் ஒரு இரவு அறைக் கட்டணமாக செலவிடப்படுகின்றமை பெரும் சுமையாகும் என ஊடகங்கள் கண்டித்துள்ளன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *