Breaking
Mon. Apr 29th, 2024

 ஐக்கிய நாடுகள் விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது. அதனாலேயே அதனை இலங்கை எதிர்ப்பதுடன் நிராகரித்துள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நீதியற்ற செயல். வெளி ஊக்குவிப்புக்களின் அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளதாவதுஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்கு அப்பாற்பட்ட நிலையில் இலங்கை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமையே ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை தமது நாடு நிராகரித்தமைக்கு காரணமாகும்.அத்துடன் இந்த விசாரணை இலங்கையின் இறைமை மற்றும் சர்வதேச அடிப்படை சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிலான முன்னேற்ற்ஙகளை இது தவிர்க்கின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் 300000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் 11000 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.1931 ஆம் ஆண்டில் இருந்து ஜனநாயக வழியில் இலங்கை சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் போரின் பின்னர் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ரீதியில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. சுமார் இரண்டு தசாப்தங்கள் வடக்கில் தேர்தல் நடத்துவது தாமதமாகியது. காரணம் அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் வலுப்பெறுவதை புலிகள் அமைப்பு விரும்பவில்லை. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் மனித உரிமைகளை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுவது நீதியற்ற செயலாகவே உள்ளது. மூன்று தசாப்தங்களைக் கொண்ட இலங்கையின் போரின் போது விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன. யுத்தம் காரணமாக இலங்கையின் அனைத்து மக்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.தற்போது இலங்கையில் பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறை ஒன்று வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.வெளி ஊக்குவிப்புக்களின் அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *