Breaking
Sat. May 4th, 2024
ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதுரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  கூடிய விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளுண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட இலங்கை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர் தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற் றம் மட்டுமல்ல. என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், அரசியலமைப்பு மாற்றங்களுடன் ஜனநாயகம் திரும்பியமை, நல்லாட்சி, திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய அமெரிக்க உயர் பிரமுகர்களிடையே இலங்கைக்கான பயணங்களை ஊக்குவிப்தில் முக்கியமான பங்காற்றி யுள்ளன. என்றும் கூறியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *