Breaking
Thu. May 16th, 2024

– ARA.Fareel- –

நாட்டின் சில பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் மாத சமய வழி­பா­டுகள் ஒலிபெருக்­கிகள் மூலம் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பாடுகள் கிடைத்­துள்­ளன.
பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அருகில் பல பௌத்த பன்­ச­லைகள் இருக்கும் பிர­தே­சங்­க­ளிலும் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் இவ்­வாறு நடாத்­தப்­ப­டு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­தாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.
பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளே மாத்­திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்­ளப்­பட வேண்டும். இல்­லையேல் அது இன உற­வு­க­ளுக்குப் பாத­க­மாக அமை­யலாம் என உலமா சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கருத்துத் தெரி­விக்­கையில், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ரமழான் மாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பே பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தேவை­யான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருக்­கி­றது.
பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் அருகில் வாழும் மக்­களை அசௌ­க­ரி­யப்­ப­டுத்தும் வகையில் அமையக் கூடா­தெ­னவும் ஏனைய இனத்­த­வர்­க­ளது உணர்­வு­க­ளுக்கு பாதகம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டா­தெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
என்­றாலும் சில பள்­ளி­வா­சல்­களில் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. ஒரு பள்­ளி­வா­சலைச் சூழ 7 பௌத்த பன்­ச­லைகள் இருப்­ப­தா­கவும் அங்கு பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்­கியில் அதிக சப்­தத்­துடன் சமய வழி­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் முறைப்­பாடு கிடைத்­துள்­ளது.
ஒரு பிர­தே­சத்தில் பல பள்­ளி­வா­சல்கள் இருக்கும் போது ஒரு பள்­ளி­வா­சலில் தீக்கும் வேறொன்றில் தொழு­கையும் மற்­றொன்றில் பயானும் என்று ஒரே நேரத்தில் நடாத்­தப்­ப­டு­வதும் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் கூடு­த­லாக இருப்­பதும் அப்­பி­ர­தேச மக்­களை அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கு­கி­றது.
எமது அமல்கள் ஏனைய சமூ­கத்­தி­னரைப் பாதிக்­காத வகையில் அமைய வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பல சவால்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்தில் நாம் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *