Breaking
Mon. Apr 29th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

கொழும்பு மேயா் முசம்மில் கொலனாவை பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை அன்பளிப்பு செய்வதாக உறுதியளித்தாா்.

கெலானாவையில் உள்ள 24 பள்ளிவாசல் கள் அமைப்பின் தர்மாகத்தா உறுப்பினர்கள் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மிலை தெமட்டக்கொடையில் நேற்று (8)ஆம் திகதி சந்தித்தனா்.

இச்சந்திப்பில் உரையாற்றிய மேயா் முசம்மில் தெரிவித்தாவது –

கடந்த பாராளுமன்றத் தோ்தலில் ஜ.தே.கட்சி சாா்பில் போட்டியிட்ட நான் மறைந்த மஹ்ருப் மற்றும் சபீக் ரஜாப்டின் ஆகிய 3
முஸ்லீம்களையும் தமது விருப்பு வாக்களை அளிக்காது வெளியாருக்கு அளித்து நமது 3 பிநிதிகளையும் இழந்தீா்கள்
அதனை இம்முறையும் செய்யவேண்டாம். கடந்த பாராளுமன்றத் தோ்தலில் கண்டியில் ஹக்கீம், ஹலீம், காதா் பைசா் முஸ்தபா 4 முஸ்லீம் உறுப்பினர்கள் தெரிபு செய்யப்பட்டனா்.

ஆனால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழும் கொழும்பில் நாம் நமது பிரநிதிகளைச் தெரிபு செய்யாமல் 5வருட காலமாக கஸ்டப்பட்டோம். கொழும்பில் பல கூறுகளாகப் பிரிந்து செயல்பட்டு நமது பிரநிதித்துவத்தை இழந்தோம். கடந்த பாராளுமன்றத்தில் செய்த தவறை இம்முறையும் செய்ய வேண்டாம்.என முசம்மில் வேண்டிக் கொண்டார்.

கொழும்பில் இருந்து வாழும் முஸ்லீமகளே கொலனாவை அதனை அண்டிய பிரதேசத்தில் குடியேறி வாழ்கின்றனா். அங்கு முஸ்லீம்களுக்கென ஒரு பாடாசலை இல்லாத அவல நிலை பண்நெடுங் காலமாக நிலவி வருகின்றது.
அதற்காக முதற்கட்டமாக எனது சொந்த நிதியில் இருந்து 10 இலட்சம் ருபாவை அன்பளிப்புச் செய்வதாக மேயா் முசம்மில் உறுதியளித்தாா்.

கொலாவையில் பள்ளிவாசல்கள் அமைப்பு என்னை சந்தித்து எதிா்வரும் தோ்தல் சம்பந்தாமாக ஒட்டுமொத்தமாக சந்தித்ததையிட்டு நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன். இப்போது ஜ. தே.கட்சியில் எனது மனைவி பெரோசா முசம்மில் தோ்தலி்ல களமிருகின்றாா். அவரை நாம் அனைவரும் சோ்ந்து ஒட்டுமொத்தமாக வெற்றியளிக்கச் செய்யல் வேண்டும்.

கொழும்பில் அபிவிருத்திகளுக்கு அரசாங்கத்தில் நிதியில்லாவிட்டாலும் ஜக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிடமாவது நாம் உரிய கல்வித் திட்டத்தினை கையளித்து கொலநாவையில் ஒரு ஆண்,பெண் பாடசாலை ஒன்றை நிறுவதற்கு அடுத்த ஜ.தே.கட்சி ஆட்சியில் நாம் முயற்சியளிப்போம் என கொழும்பு மேயா் முசம்மில் அங்கு தெரிவித்தாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *