Breaking
Tue. May 21st, 2024

ஜுனைட் . எம். பஹ்த்

நாட்டின் பலபிரதேசங்களில் புதிய கண் நோயொன்று தற்போது பரவி வருவதாக காத்தான் குடி சுகாதார வைத்திய அதிகாரி  U.L.M.நஸ்ருத்தீன்  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர் .

“வைரல் கண் ஜக்டிவைடிஸ்” என இந்நோய் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நோய்குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இது ஒருவகை வைரஸ் இனால் ஏற்படுகின்றன கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றது.

இந்த அடையாளங்கள் கண்ணிலாவது காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகிலுள்ள அரச கண் சிகிச்சை நிலையங்களுக்கே செல்லுமாறு பொதுமக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.

இவ்வகையான கண் நோய் இலகுவாக தொற்றும் தன்மை கொண்டதாக காணப்படுவதனால், நோய் தொற்றியவர்கள் தங்களது கண்களை சுத்தமான துணியொன்றினால் கட்டிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்துடன், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதை விட்டும்,நோய் தொற்றுக்குள்ளான மாணவர்களை பாடசாலை அனுப்புவதை. தவிர்ந்து கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *