Breaking
Thu. May 2nd, 2024
(டாக்டர் என். ஆரிப்)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு கரையோரப் பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டதுமாகும்.
நீண்ட காலக்குறைபாடு
இத்தகைய பிரதேசத்தில் இதுவரை ஜனாஸாக்களை அரச, தனியார் வைத்தியசாலைகளில் இருந்து எடுத்து வருவதற்கான பிரத்தியேகமான வாகனங்கள் இல்லாமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்து வந்தது. முன்னேற்றம் கண்ட இந்தப் பிரதேசத்தில் வாகனங்கள் மலிந்தே காணப்பட்டாலும், ஜனாஸாக்களை தமது வாகனங்களில் ஏற்றுவதற்கு பெரும்பாலானவர்கள் ஏதோவொரு காரணத்திற்காக முன்வருவதில்லை. இந்த விடயத்தில் அவர்களைக் குற்றம் காணவும் முடியாது. பின்புல ஆதரவு இல்லாத குடும்பங்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்.
இந்தக் குறைபாடு நீண்ட காலமாக இருந்து வந்தாலும், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல, இந்தக் குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது யார், அதனை முன்னெடுப்பது எப்படி, அது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இல்லாமலே அல்லது விடை காண முயற்சிக்கப்படாமலே இருந்து வந்தது.
செஸ்டோ அமைப்பு
இத்தகைய சூழ்நிலையில் தான், செஸ்டோ அமைப்பினர் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முன்வந்தனர். கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் 1999ஆம் வருடம் க.பொ.த.(உஃத) பரீட்சைக்குத் தோற்றி பல்துறைகளிலும் மிளிர்ந்து வரும் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து செஸ்டோ(சாஹிறா கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம் ) எனும் அமைப்பை உருவாக்கி சிறந்த முறையில் சமூகப்பணி செய்து வருகின்றார்கள். 2014ஆம் ஆண்டிற்கான அதன் தலைவராகக் கடமையாற்றி வரும் கல்முனைப் பிராந்திய மின்சார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளரான சகோ. எம். ஆர். ஏம். பர்ஹான் அவர்களின் வழிகாட்டலில் இந்த வருடத்தின் பிரதான நடவடிக்கையாக ஜனாஸா வாகனம் ஒன்றைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கி தற்பொழுது அதில் ஐம்பது சதவீத வெற்றியையும் கண்டுள்ளார்கள். 
நல்லுள்ளம் கொண்ட பங்காளிகளுடனான சந்திப்பு
அண்மையில், இந்த ஜனாஸா வாகனத்தைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய நல்லுள்ளம் கொண்டவர்களுடனான சந்திப்பொன்று மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்ரோரண்ட் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. அதாவது, எதிர்காலத்தில் இவ்வாகனத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பராமரிப்பை எவ்வாறு முன்னெடுப்பது, அதன் பராமரிப்புக்கான நிதியை எவ்வாறு திரட்டுவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இந்த வாகனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதியளவில் பாவனைக்கு விடுவதென உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 
உங்களின் பங்களிப்பு என்ன
இந்த வாகனத்தின் உச்சபயனை அதன் பயனாளிகளுக்கு வழங்கிடத் தேவைப்படும் நிதியை நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் வாழ்விடம் எங்கிருந்தாலும் வழங்குவதன் மூலம், அல்லாஹ்வின் அருளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்வோமாக!
கணக்கிலக்கம்: 0110173739001  Amana Bank, Sammanthurai
                          012660000087    Sampath Bank, Sainthamaruthu
மின்னஞ்சல்:       zesdo9699@gmail.com

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *