Breaking
Mon. May 20th, 2024
-விடிவெள்ளி  ARA.Fareel-
கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற சம்­பவம் இன­வாத செய­லல்ல. மது போதையில் இருந்­த­வ­ரா­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.
இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்­பான்மை மக்கள் முஸ்­லிம்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ விரும்­பு­கி­றார்கள் என அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லையின் இஹ­ல­முல்ல சுகுன குண­வன்ச தேரர் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்­சரிடம் தெரி­வித்தார்.
இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஹலீம் “கல்­ஹின்னை சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து சிலர் இன­வா­தத்­தைத்­தூண்ட முயற்­சிக்­கி­றார்கள். இந்த முயற்­சிக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. கல்­ஹின்னை மற்றும் அங்­கும்­புர பகு­தி­களில் சமா­தா­னத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான சகல முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன” என்றார்.
அமைச்சர் ஹலீம் நேற்று முன்­தினம் மாலை அங்­கும்­புர இஹ­ல­முல்ல பன்­ச­லைக்கு விஜயம் செய்தார். அமைச்­ச­ருடன் முஸ்­லிம்­களும் பன்­ச­லைக்குச் சென்­றனர். அங்­கும்­புர மற்றும் கட்­டு­கஸ்­தோட்டை பொலி­சாரும் அங்கு சென்­றி­ருந்­தனர்.
அங்கு இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று நடை­பெற்­றது. கல்­ஹின்னை சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தில் அமை­தியை நிலை­நாட்­டு­வது தெடர்பில் ஆரா­யப்­பட்­டது.
இச்­சந்­தர்­ப்பத்­திலே இஹ­ல­முல்ல பன்­ச­லையின் தேரரும் அமைச்சர் ஹலீமும் இவ்­வாறு கருத்து தெரி­வித்­தனர்.
அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம் கல்­ஹின்னை சம்­பவம் தொடர்பில் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில், இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்கள் மற்றும் ஊர்ப் பிர­மு­கர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
இதன் முதல் கட்­ட­மாக தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஆறு பேரையும் பிணையில் விடு­விப்­ப­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கி­றது. பிணை வழங்­கு­வதை பொலி­சாரும் எதிர்க்­க­வில்லை. நாளை புதன்­கி­ழமை சந்­தே­க­ந­பர்கள் அறு­வரும் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.
இவர்­களில் ஒருவர் முஸ்லீம் இளை­ஞ­ராவார். சந்­தே­க­ந­பர்கள் விளக்­க­ம­றி­யலில் இருப்­பதே சமா­தான முயற்­சிக்குத் தடை­யாக இருக்­கி­றது.
பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சார்ந்த பெரும்­பா­லானோர் சமா­தா­ன­மாக பிரச்­ச­னைகள் இன்றி வாழ்­வ­தையே விரும்­பு­கின்­றனர். ஒரு சிலரே பிரச்­ச­னை­க­ளுக்குக் கார­ண­மாக இருக்­கின்­றனர். இவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டி­யது மதத்­த­லை­வர்­களின் கட­மை­யாகும்.
கல்­ஹின்னை பிர­தே­சத்தில் இன­வி­ரோத செயல்­களைத் தடுக்கும் வகையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமர் இதற்கான உத்தரவுகளைப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளார் என்றார்.
இதே­வேளை கல்­ஹின்னை பகு­தியில் இடம்­பெற்று வந்த இன­வா­தத்தைத் தூண்டும் நட­வ­டிக்­கைகள் முடி­வுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *