லண்டன், நியூயோர்க் மற்றும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹொங்கொங்இ சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பவற்றின் அனுபவங்களை பெற்று அதனை விட கவர்ச்சி மிக்க இடமாக கொழும்பு நிதி நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது: துறைமுகம், விமான நிலையம் மற்றும் நிதி நகரத்தை அண்டியதாக மாநகர திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எமது தேசிய பூகோள வரைபடத்தை மீள தயாரித்து அடுத்த வருடம் வெளியிட இருக்கிறோம். இதனுடன் இணைந்ததாக ஹம்பாந்தோட்டை, காலி, கண்டி, அநுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்பவற்றை முறையாக முன்னேற்ற உள்ளோம். அரசியல் பாதுகாப்பு என்பவற்றில் எமது நாடு ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. எவருக்கும் இங்கு வந்து முதலீடு செய்ய முடியும். எமது நாட்டை வர்த்தக கேந்திரமாக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.