Breaking
Sun. May 19th, 2024

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.

3 காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

4 காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

5. காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி ‘காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்’ ‘மதியம் இளவரசனைப் போல சாப்பிட வேண்டும்’ ‘இரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

6. பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகத்திற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை கேட்பது போன்றவை சிறந்த செயலாகும்.

7. நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே
தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.

8. பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *