Breaking
Thu. May 9th, 2024

ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார்.

இவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வரலாற்றில் பல சோகமான சம்பவங்கள் நடந்துள்ளன. வேகமான பவுன்சரால் தான் ஒரு வீரர் தாக்கப்படுவார் என்று கிடையாது. சுழற்பந்தால் தாக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு.

* 1870ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் நடந்த முதல்தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் வீரர் ஜார்ஜ் சம்மர்ஸ் (வயது 25) துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த போது, ஷாட் பிட்ச்சாக வந்த பந்து தாக்கியதில் படுகாயமடைந்தார். 4 நாள் கழித்து அவர் உயிரிழந்தார்.

* 1959ம் ஆண்டு பாகிஸ்தான் முதல் தர கிரிக்கெட்டில் அப்துல் அஜீஸ் (வயது 17) என்ற விக்கெட் கீப்பர் நெஞ்சில் பந்து தாக்கியதில் சுயநினைவை இழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

* 1998ம்ஆண்டு வங்கதேசத்தில் நடந்த முதல்தர லீக் கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் ராமன் லம்பா (வயது 38) பங்கேற்ற போது, துடுப்பாட்டக்காரர் அடித்த ஷாட்டில் அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த இவரது நெற்றியை பந்து தாக்கியதில் கோமா நிலைக்கு சென்றார். மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

* தென்ஆப்பிரிக்க முதல்தர கிரிக்கெட் வீரர் டேரின் ரான்டால் கடந்த ஆண்டு உள்ளூரில் நடந்த போட்டியின் போது பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.

* தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர் அவுஸ்திரேலியாவின் பிலிப் ஹியூக்ஸும் பந்து தாக்கியதில் மரணத்தை தழுவியிருக்கிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *