Breaking
Thu. May 2nd, 2024

அட்­டா­ளைச்­சேனை, கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மாடிக் ­கட்­டி­டத்­தி­ல் பாது­காப்பு முறை­மை­யினை மேற்­கொள்­ளு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீத­வா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று கல்­லூரி நிரு­வா­கத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இக்­கல்­லூ­ரியின் 03ஆம் வரு­ட­ மா­ண­வ­னா­கிய ஜே.றவூஸ்டீன் வயது (16) கடந்த பெப்­ப­ர­வரி மாதம் 13ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை 03ஆவது மாடி­யி­லி­ருந்து விழுந்து மரணமடைந்தார்.

இத­னை­ய­டுத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­யை­ய­டுத்து இக்­கல்­லூ­ரியின் மாடிக்­கட்­டிடத்தின் வெளிப்­ப­குதி அங்­கி­ருந்த மாண­வர்­களின் பாது­காப்­புக்கு உகந்­த­வை­யாக அமை­யா­தி­ருந்­தமை பற்றி நீதி­மன்­றத்­திற்கு தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து நேற்று அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் கல்­லூ­ரிக்கு நேரில் சென்று பார்­வை­யிட்டார்.

இதன் போது கல்­லூ­ரியின் அதிபர் எம்.எல்.அப்துல் லத்தீப் மௌலவி மற்றும் கல்­லூரி நிரு­வா­கத்தின் செய­லாளர் யூ.எல். நியாஸி மௌலவி உள்­ளிட்ட குழு­வி­னரும் குறித்த இடத்­திற்கு சமூகமளித்­தி­ருந்­தனர்.

குறித்த கல்­லூ­ரியின் 03 மாடி­க­ளையும் மற்றும் விடு­தி­க­ளையும் அதன் உள், வெளிப்­புற சுற்­றுச்­ சூ­ழ­லையும் நீதி­பதி பார்­வை­யிட்ட போது மாண­வர்­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் கட்­டி­டத்தின் பாது­காப்பு முறை­மையை ஏற்­ப­டுத்து­மாறு நீதிபதி கட்­டளை பிறப்­பித்தார்.

மேலும் 130 மாண­வர்கள் பயின்று வரும் இக்­கல்­லூரியின் சூழலை சுத்தம் செய்து வெளிப்­புறச் சூழலையும் அழகு படுத்துமாறும் நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

குறித்த விடயங்களை மூன்று மாத காலத்தினுள் நிறைவேற்றுவதாக கல்லூரி நிருவாகத்தினர் இதன் போது நீதிவானிடம் உறுதியளித்தனர்.

-Vidivelli-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *