Breaking
Mon. Apr 29th, 2024

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் பொது பல சேனா அமைப்பினரை தொடர்ச்சியாக கண்கானிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ள பொதுபல சேனா அமைப்பின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த ரன்முத்து குமாரணசிங்க என்ற வேட்பாளர் அது குறித்த ஒளிப்பதிவொன்றை சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றார். இவ்விடயம் குறித்து சட்டத்தரணிகளாலும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளாலும் தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு சொய்யப்பட்டுள்ளது. இது குறித்து உடணடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் மற்றுமொருன் வன்முறையை கட்டவிழ்த்துவிட முற்படும் பொதுபலசேனாவின் பிரச்சார கூட்டங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதான் செலுத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டில் நல்லாட்சியை நோக்கி பயனிக்கின்ற வேளையில், முஸ்லிம்களையும் ஆல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் செயலானது பாரதூரமான விடயமாகும். சாதாரண பௌத்த மக்களை இனவாத கருத்துக்களால் தூண்டி மற்றுமொரு வன்முறைக்கு வழிசமைக்கும் செயற்பாடாகும்.

முஸ்லிம்கள் தமது உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடுகின்றனர். ஏனைய மதத்தவர்களது உரிமைகளை பறித்துவிட்டு தாம் மாத்திரம் வாழ வேண்டும் என்ற என்னம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. அத்துடன், பல்லின சமூகத்தவர்கள் வழும் இலங்கையின் நல்லிணக்கத்துடன் அணைத்து தரப்பினருடன் இணைந்து வாழ்வதற்கு விரும்புகின்றனர்.

அத்துடன், தீவிரவாதத்தை இஸ்லாம் முழுமையாக எதிர்க்கின்றது. அதற்கு துனை போவதையும் மிகத் தெளிவாக தடுக்கிறது. எனவே நாட்டிலுள்ள சாதாரண அப்பவிப் பொதுமக்களிடம் முஸ்லிம்கள் பற்றி பிழையான கருத்துக்கள் தோற்றுவிக்கப்படுகின்றது எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகளானது கடந்த வருடம் ஜூன் மாதம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைபோன்று மற்றுமொரு வன்முறைக்கு தூண்டும் செயற்பாடாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு பூரண உதவிகளை வழங்கியது. அவர்களுக்கு பாதுகாப்பையும் பொடுத்தது. ஆனால், இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என்பதை பொதுபலசேனா புரிந்துகொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *