Breaking
Sun. May 5th, 2024

சீனத்தேசத்திலிருந்து உலகலாரீதியாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இதற்கான பாடசாலை மாணவர்கள் சுத்தம் சுகாதாரம் பேணி நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

தம்பலகாமம் மீரா நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று  (30) இடம் பெற்ற தேசிய மட்டத்துக்கு சிறுவர் அத்திலாந்திக் போட்டியில் தெரிவான  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிரம்பி வழியும் சீனர்கள் இதன் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் எமது தாய் தந்தை சகோதர உறவுகளிடம் உள்ளது இது எமது நாட்டில் உள்ள மக்களை தாக்காமல் இறைவனிடத்தில் இறையஞ்ச வேண்டும் .

கல்விக்கான கொள்கையில் நாம் அதிக நிதியினை பயன்படுத்தி உள்ளோம் ஆரம்பக் கல்விக்கான கல்வியினை மேம்பாடையச் செய்வதற்காக அதிக போட்டோ பிரதி இயந்திரங்களை மூதூர்,கிண்ணியா,தோப்பூர்,தம்பலகாமம்,குறிஞ்சாக்கேணி,ஈச்சலம்பத்தை ஆகிய கல்வி கோட்டங்களை உள்ளடக்கிய பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம் ஆரம்ப கல்வியினை வளர்ப்பதனால் நாளைய உயர்கல்விக்கு சிறந்த பெறுபேறுகளுக்கு அது எடுத்துச் செல்கிறது இதனால் வைத்தியத் துறை,பொறியியல் துறை போன்றவற்றுக்கு மாணவச் செல்வங்கள் தெரிவாகலாம். ஆரம்ப கல்விக்கு உரமாட்டுவதனால் தான் உயர் கல்வியின் வாய்ப்பை இலகுவாக மாணவச் சமுதாயம் அடைந்து கொள்ளும்.

இதற்காக கடந்த கால நான்கு வருடத்தினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் சகல பாடசாலைகளுக்கும் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து அது கல்வியின் வளர்ச்சிக்கு வித்திட்டதை யாவரும் அறிவீர்கள் வாழ்வாதாரத்தில் நீரினைப்பு மின்சாரம் என்பன அரசியலுக்கு அப்பாற்பட்டது அதிகாரம் என்பது மக்களுடைய ஆணையாகும் இதனை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் எதிர்வருகின்ற தேர்தலுக்கு முன் கல்விக்கான சேவை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெறும் சிறந்த கல்விச் சமூகம் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்


#அப்துல்லா_மஃறூப் #AcmcTrincomalle #AcmcNews #Lka #srilanka

Related Post