Breaking
Mon. May 6th, 2024

அஸ்ரப் ஏ சமத்

கோட்டாபயா ராஜபக்ச செப்டம்பர் மாதம்வரை நிதி மோசடியில் அவரை கைது செய்ய முடியாது. என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி அமைச்சரவைக்கு நான் விளக்க வேண்டும் அத் தீர்ப்பு பற்றி எனக்கு கூறுங்கள் என சட்டமா அதிபரை நான் வினவியபோது.

இவ்விடயம் பற்றி சட்டமா அதிபருக்கோ சட்ட திணைக்களத்திற்கு எதுவும் தெரியாது இதனை நாங்கள் அறிந்திருக்க வில்லை என கூறுகின்றார்.

அடுத்த பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய அமைச்சரவை வரும் இந்த செப்படம்பர் மாதம் தான் அதுவரை கோட்டாபாயவை கைது செய்ய முடியாது.

இது பெரும் ஆச்சிரியத்தை தருகின்றது. இந்த நீதி தீர்ப்பு விடயங்கள் இலங்கையின் இன்னும் ஒரு குறுகிய மட்டத்திலேயே இயங்குகின்றது.

இச் சட்டங்களை பொது நாலவாய நாடுகள் மட்டத்தில் மேலும் கொண்டு சென்று அதனை விரிவாக்கி கடிணப்படுத்தல் வேண்டும். என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்திய 2 நாள் ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு உரையாற்றினார்.

வெகுஜன ஊடக சுதந்திரம் 2015 பற்றி மக்கள் அறிவிப்பு பலகையில் பிரதமமந்திரி எதிர்கட்சித்தலைவர் நிமல்சிறிபால டி சில்வா, மற்றும் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டு ஊடக சுந்தந்திரத்தை பற்றி மக்களுக்கு அறிவிப்போம் என உறுதிப்படுத்தினர்.

அங்கு தொடாந்து உரையாற்றிய பிரதம மந்திரி –

இரண்டு முன்னாள் நீதிபதிகள் எனக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

அவர்கள் அதில் நான் பொலிஸ் திணைக்களத்தில் நிதி மோசடிப் பிரிவை நானே உருவாக்கினேன் என கருதியே வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இது பற்றி பொலிஸ் மா அதிபரிடம் வினவியபோது இதனை பொலிஸ் தினைக்களமும், சட்டமா அதிபரும் இனைந்து இவ்விடயம் பற்றி துரிதமாக செயல்படுவதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கை எனக் கூறுகின்றனர்.

அவர்களது வழக்கு வரும்போது எனது பதவிக்காலம் முடிவடைந்து மீள நான் அப்பதவிக்கு வந்தால் இவ வழக்கு 5 வருடத்திற்கு சென்று கொண்டு இருக்கும்.

இது தான் இந்த நாட்டில் வழக்குகள் உள்ள குறைபாடாகும்.

முன்னைய கால ஆட்சியில் அரச ஊடகங்களுக்கு ஒரு விதமும் தனிப்பட்ட ஊடகங்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரலுமாகவே இருந்தது. சகல விளம்பரங்களும் அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு கொடுத்தார்கள்.

ஊடகவியலாளர்கள் வெளிநாட்டுக்கு ஓடி ஒழிந்ததார்கள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டடர்ர்கள், காணமல் போனார்கள். ஆனால் தற்பொழுது ஊடகங்களுக்கு வேண்டி சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். தகவல் அறியும் சட்டத்தினை அமுல்படுத்துவோம்.
சட்டங்கள், நிதிகள் சம்பந்தப்பட்ட இயங்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் சட்ட நீதி ஓழங்குகளை பொது நல வாய அமைப்பு ஊடகா விரிவுபடுத்தவேண்டும்.

காரணம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே பொதுநல வாய நாடுகளின் தலைவராககும் காணப்படுகின்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *