Breaking
Sat. Apr 27th, 2024

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றஞ்சாட்டவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலன்விசாரணை பிரிவினர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியான ஷிரோமி பெரேராவிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர்  மலேசியாவுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார். அவர், இந்த வழக்கில் அரசதரப்பு சாட்சியாக்கப்பட்டவராவார்.

எனினும் அவரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரான சுது மல்லி,  புலிகள் அமைப்பின் தற்கொலை பிரிவை சேர்ந்த தியாகராசா பிரபாகரன் அல்லது அன்பு மற்றும் பொட்டு அம்மான், செல்வமோகன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்யமுயன்றார் என்று கூறப்பட்டுள்ளது,

எனினும் செல்வமோகன் பின்னர் அரசதரப்பு சாட்சியாக்கப்பட்டார். முதலாவது சந்தேக நபரான வீரகோனும் மூன்றாவது சந்தேக நபரான செல்வமோனகனும் 2009 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதியன்று விமான நிலையத்தில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து இரண்டாவது சந்தேகநபர் கற்பிட்டியில் ஒளிந்திருக்கும்போது கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் இரகசிய பொலிஸார் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (O)
Home

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *