Breaking
Sat. May 4th, 2024

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி போர்வைக்குள் சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றினைந்து அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலமே தெரியவந்தது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (25) வியாழக் கிழமை அமைச்சர் சஜித் தலைமையில் செமட்ட செவண இரு மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்
தற்போது அசாதாரண சூழ் நிலையே நாட்டில் ஏற்படுகிறது எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம் பெற ஏற்பாடுகள் இடம் பெற்று வருகிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிகஹெல உறுமய, தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றினைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்தாலோசித்ததில் சஜித் பிரேமதாச பொது வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளருக்கு பொறுத்தமானவர் என சிரேஷ்ட அமைச்சர்கள் பங்கு கொண்ட ஐக்கிய தேசிய முண்னனி ஊடாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு ஜனாதிபதி தேர்தலே சிறுபான்மை சமூகத்தை அரவணைக்கும் தலைவராக சஜித் பிரேமதாச இடம் பிடிப்பார் தனது தந்தை ஆர்.பிரைமதாச வீடற்றவர்களுக்கு வீடு என்ற திட்டத்தை நாட்டில் ஆரம்பித்து வைத்து செயற்பட்ட வண்ணம் இருக்கையில் அகால மரணமடைந்தார்

  இந்த நாட்டில் பிரதமருடன் பிரதி தலைவர் சஜித் இணைந்து ஸ்தீரமான ஆட்சியை உருவாக்க வேண்டும் இனவாதங்களை ஒழித்து மக்களுடைய வாழ்வில் அதாவது வடகிழக்கு தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்த வேண்டும் இனவாதிகளை ஒழித்து நாட்டை சுபீட்சமான அமைதியான சூழலை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் .

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி என்பது அது சிறுபான்மை வாக்குகளிலும் தங்கியுள்ளது இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.சிலர் இதனை தவிடு பொடியாக்க  முனைகிறார்கள் .

கட்சிக்குள்  உட்பூசல்களை சந்திக்க நேரிடுகிறது .தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமொன்றை உருவாக்கி இருபது வருட கால ஆட்சிதை நிலை நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் இணங்கண்டு முன்னேற்றப்பாணைக்கு இட்டுச் செல்ல வேண்டும் .

சமூகப் பொறுப்புக்களை சுமந்த எமக்கு சமூகத்தின் மீது கொண்ட அக்கரை காரணமாக ஐக்கிய தேசிய முன்னனியில் முன்னால் அமைச்சர்களான றிசாத் பதியுதீன் றவூப் ஹக்கிம் போன்றோர்கள் சிறுபான்மை கட்சியினராக இருக்கிறார்கள் என்றார்.

Related Post