Breaking
Wed. May 15th, 2024

பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்கு எமக்கு சட்­ட­ரீ­தி­யான “கால வரை­ய­றையை” வழங்­கு­மாறு அரசை வலி­யு­றுத்தும் போராட்­டத்தை எம்­மோடு இணைந்­துள்ள 50 எம்.பிக்கள் முன்­னெ­டுக்­க­வுள்­ளார்கள் எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார இது தொடர்­பாக 50 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்ட கடி­தமும் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்­றத்தில் இன்று எதிர்க்­கட்­சியின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கான எமது உரிமை பறிக்­கப்­பட்­டது. இன்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யான எமக்­கான பேச்­சு­ரிமை மறுக்­கப்­ப­டு­கின்­றது.

நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக குரல் கொடுக்கும் உரிமை எமக்கு உள்­ளது. எம்­மோடு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 50 எம்.பிக்கள் இருக்­கின்­றனர்.
எனவே பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்­கான கால­வ­ரை­யறையொன்று எமக்கு உள்­ளது. ஆனால் அந்தக் “காலம்” எமக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை இந்த அரசு மீறிச் செயற்­ப­டு­கி­றது. இதனை எதிர்த்து 50 எம்.பி.க்கள் கையெ­ழுத்­திட்டு சபா­நா­ய­க­ரிடம் மனு­வொன்றை கையளித்­துள்ளோம். எமக்கு நியாயம் கிடைக்­கா­விட்டால் “எதிர்க்­கட்­சியின்” உரி­மைக்­காக பாரா­ளு­மன்­றத்­துக்குள் குரல் கொடுப்போம்.

எதிர்க்­கட்­சிக்­கான உரி­மையை பறிக்கும் பிர­த­ம­ரி­னதும் சபா­நா­ய­க­ரி­னதும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச பாரா­ளு­மன்றச் சங்­கத்­திற்கு நான் முறை­ப்பாட்டுக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்ளேன்.

உல­கிற்கு தன்னை கன­வா­னாகக் காட்டிக் கொள்ளும் பிர­த­மரின் பாராளுமன்ற செயற்பாடு தொடர்பாகவே இம்மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை, ஆனால் முறையிடும் கடமை எமக்கு உள்ளது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *