Breaking
Mon. Apr 29th, 2024
சம்மாந்துறை பிரதேச சபைகுட்பட்ட நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், நூலகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நூலங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(ன)

Related Post