Breaking
Thu. May 2nd, 2024
ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக சவ+தி அரேபியா ஈராக்குடனான தனது 900 கிலோமீற்றர் பரந்த பாலைவன எல்லைப்பகுதியில் பல அடுக்கு வேலியை அமைக்க தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக சவு+தியின் ஈராக்-குவைட் எல்லைக்கருகில் இருக்கும் ஹபர் அல் பதீனில் இருந்து ஜோர்தானுக்கு அருகாமையில் இருக்கும் வடகிழக்கு நகரான துரைப் வரையான பகுதிக்கு வேலியை பலப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது.
இதில் ஐந்து அடுக்கு வேலியுடன் இரவுப் பார்வை கொண்ட கெமராக்கள், 50 ராடார்கள் மற்றும் கண்காணிப்பு கொபுரங்களும்; அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் ஊடுருவல், போதை மற்றும் ஆயுத கடத்தல், கால்நடைகளை கடத்தும் குற்றச்செயல்கள் முற்றாக நிறுத்தப்படும் என்று சவ+தி அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஈராக்கில் பதற்ற நிலை தீவிரமடைந்த 2006 ஆம் ஆண்டிலேயே இந்த எல்லை வேலி அமைக்கும் திட்டத்தை சவு+தி அறிவித்தது. இதனை அமைப்பதற்கு 2009 ஆம் ஆண்டு சவ+தி அரசு ஐரோப்பிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுடன் கைச்சாத்திட்டது.
எனினும் அரச எதிர்ப்பு குழுக்கள் மற்றும் அல் கொய்தா அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து நாட்டின் அனைத்து எல்லைகளையும் பலப்படுத்த உள்துறை அமைச்சு தீர்மானித்தது. ஈராக்கில் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் கணிசமான நிலத்தை கைப்பற்றி கடும் சவால் விடுத்துவரும் நிலையிலேயே சவு+தி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எல்லைப் பகுதியில் இருந்து ஈராக் படையினர் வாபஸ் பெறப்பட்டதைத் தொடந்து சவு+தி அரேபியா தனது ஈராக் எல்லைக்கு கடந்த ஜ{லையில் 30,000 படையினரை அனுப்பியிருந்தது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *