Breaking
Tue. May 14th, 2024

எதிர்கால பயணத்திலே சான்றிதழ் முகாமைத்துவ கணக்காய்வாளர் நிறுவனம்         தகைமை வாய்ந்த சேவைகளை முன் கொண்டு செல்லுவதற்கும் இத்துறையில் கற்கக்கூடியவர்களுக்கு தகுதி வாய்ந்த கணக்கியல் கல்வியை அளிப்பதற்கும் வழி வகை செய்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சான்றிதழ் முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் லக்‌ஷ்மன் ஆர் வடவெல ( சான்றிதழ் முகாமைத்துவ கணக்காளர் தலைவர் கணக்காளர் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் ஆளாண்ஊ கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

இந்த நிறுவனம் எனது அமைச்சின் கீழ் இயங்குவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது. இந்த நிறுவனத்தில் பயின்று சித்தி பெற்ற புதிய பட்டதாரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் தற்போது முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தில் பயின்று கொண்டிருப்போருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.

நீங்கள் அறிந்த படி சான்றிதழ் முகாமைத்துவ கணக்காளர் சேவை மட்டும் தான் தேசிய தொழில் சார் முகாமைத்துவ கணக்கியல் நிறுவனமாகும். இது நாடளாவிய ரீதியில் புதிய கணக்காளர்களை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றது.

இன்று நமது நாட்டிலே அரசுக்கும் தனியார் துறையினருக்கும் கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது. 1999 இல் இருந்து இந்த நிறுவனம் தொழில் சார் முகாமைத்துவ கணக்காளர்களை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பதையிட்டு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த நிறுவனம் சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளமை எமக்கு பெருமை தருகின்றது. சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தில் இந்த நிறுவனம் அங்கத்துவம் பெற்றுள்ளதுடன் தென்கிழக்காசிய கணக்காளர் சம்மேளத்திலும் அங்கத்துவம் வகிக்கின்றது. அது மட்டுமன்றி பசுபிக் பிராந்திய கணக்காளர் நிறுவனத்திலும் உறுப்பினராக உள்ளது.

இலங்கையிலுள்ள கணக்கியல் நிறுவனங்கள் இரண்டில் சீ எம் ஏ முன்னனி வகிக்கின்றது என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். அது மட்டுமன்றி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான முகாமைத்துவ கணக்காளர்களை உருவாக்கி வருகின்றது.

சீ எம் ஏ நிறுவனத்திலே 16000 இற்கு மேற்பட்டோர் கணக்கியல் கற்கைத் துறைகளில் பயில்கின்றனர். அத்துடன் 2400 பட்டம் பெற்ற அங்கத்தவர்களை இது உள்வாங்கி இருக்கின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் நான் நம்புகின்றேன். இந்த நாட்டிலே முகாமைத்துவ கணக்கியல் தகைமையை இயன்றளவு அதிகரிப்பதற்கு இந்த நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாடுகளிலும் நியாயமான செலவுடன் கணக்கியல் கல்வியை தொடர்வதற்கு முன்வந்து செயல்படுகின்றது.

தகைமை வாய்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. வசதி குறைந்த மாண்வர்களுக்கும் உதவிகளை நல்கி வருகின்றது.

இந்த எதிர்கால பயணத்திலே சீ எம் ஏ நிறுவனம் சகல வெற்றிகளைப் பெறுவதற்கும் அதன் தகைமை வாய்ந்த சேவைகளை முன் கொண்டு செல்லுவதற்கும் இத்துறையில் கற்கக்கூடியவர்களுக்கு தகுதி வாய்ந்த கணக்கியல் கல்வியை அளிப்பதற்கும் வழி வகை செய்கின்றதென்பதை நான் குறிப்பிட விளைகின்றேன்.

அத்துடன் பேராசியர் ஆர் வட்டவெல அவர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், எனது நல்லெண்ணங்களையும் தெரிவிக்கின்றேன்.

மேலும் இம்முறை சித்தியடைந்த அத்தனை பட்டதாரி மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிப்பதோடு அவர்களின் எதிர்காலம் சிறப்படைய பிரார்த்திக்கின்றேன்.

unnamed-2 unnamed-3 unnamed-4

 

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *