Breaking
Fri. May 17th, 2024
மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கு அரச அங்கீகாரத்தை வழங்கி சிங்களவர்களை”அரவாணிகளாக்கி” விடாதீர்கள். சிங்களக் கொடி கம்பீரமாக பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டாம் என சபையில் கோரிக்கைவிடுத்த கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி.,காஷ்மீரில, இங்கிலாந்தில், பாகிஸ்தானில், ஜேர்மன், கனடாவில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
எமது ஆட்சிக்காலத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட சிலர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென இச்சபையில் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பயங்கரவாதிகளை நினைவு கூர அனுமதி அளிக்கவில்லை.
காஷ்மீரில்,பாகிஸ்தான், அமெரிக்காவில் ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் அல் கைதா, தலிபான் போன்ற பயங்கரவாதிகளை அனுஷ்டிப்பதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரத்தை வழங்கியதா? வழங்கியுள்ளனரா?
எங்குமே பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கும் அனுஷ்டிப்பதற்கும் அரசுகள் அங்கீகாரம் வழங்கியதில்லை.ஆனால் இன்று இங்கு எமது படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு விட்டனர்.அரச அங்கீகாரத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் மூலம் சிங்களவர்களை ‘அரவாணிகள்’ ஆக்க அரசு முயற்சித்துள்ளது.கம்பீரமாக சிங்களக் கொடி பறந்த நாட்டை காட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *