Breaking
Mon. Apr 29th, 2024

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் வசமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலி சீல்கள் பெருந் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய சந்தேகநபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *