Breaking
Sun. Apr 28th, 2024

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது

என தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார்.

தம்பலகாமத்தில்  (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில்

மக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய எதிர்பார்ப்புககளும் அரசியல் அபிலாஷைகளும் திறம்பட இருக்க வேண்டும் எனவும் சிறந்த அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும்

என எதிரபார்ப்பாக காணப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இது போன்று எதிர்வரும் தேர்தலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கூட்டினைவதால் பலமான நாடாளுமன்றத்தை பெரும்பான்மை ஆசனங்களுடன் உருவாக்கி ஆட்சியமைப்பார்கள்

இதற்காக சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம். நாட்டை சிறப்பாக ஆழ்வதற்கு சிறந்த தலைமையும் அபிவிருத்தி இட்டுச் செல்லவும் போதுமான தலைமைத்துவ பண்புகளையும் கொண்ட அரசியல் இங்கு காணப்பட வேண்டும்.

மக்கள் உணர்ந்து விட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் உணர்ந்து கொண்டு வாக்களிப்பார்கள் சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அவர்களை மக்கள் மத்தியில் பொய்யான அபிப் பிராயங்களை பரப்பி அப்பட்டமான பொய்களை கூறி திசை திருப்ப நினைக்கும் சில அமைச்சர்கள் செயற்படுவது இந்த நாட்டின் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துவதைப் போன்றும் இன மோதல்களை உருவாக்கவும் அடித்தளமிடுகிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம் .

இலங்கை தேசம் ஒற்றுமையை விரும்புகிறது அரசியலால் ஆக்கிரமிக்கப்படும் இனவாத பேச்சுக்களை பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமும் வெறுக்கிறது அரசியலுக்காக சோரம்போகும் இனவாத போக்காளர்களை கடுமையாக கண்டிக்கிறது.

பல சூழ்ச்சிகளை செய்து எதிர்வரும் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பது இனக்குழுக்களுக்கு இடையிலும் சிறுபான்மை மக்களுக்குமிடையிலும் அச்சத்தை தோற்றுவிக்கிறது.

சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்கி வாழ நினைப்பது சுதந்திரத்தை மறுக்கடிக்கிறது நாம் பெற்ற சுதந்திரம் சமாதானம் இங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்

Related Post