Breaking
Tue. May 7th, 2024
திருமலை அரசாங்க அதிபர் 
திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் 21.04.2014 மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதுடன் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார நேற்று (21) தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற திருமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திலலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- சிறுவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் உடன் வெளிக்கொணரப்படவேண்டும். அது தொடர்பில் உரிய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துவதுடன் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெறாத வகையில் கிராம- பிரதேச செயலக ரீதியாக சிறுவர் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் செயற்பாட்டை ஆக்கபூர்வமானதாக மாற்ற வேண்டும்.
கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றன. அவை தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.  சிறுவர்களது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தாம் உயரிய பங்களிப்பு வழங்கப்படும்.
பெற்றோர் வெளிநாடு செல்வதன் காரணமாக கிண்ணியா மூதூர் போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் பாடசாலை இடைவிலகல் அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பில் பெற்றோர்களை அறிவுறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த ஒரு சம்பவம் நடைபெற முன்னர் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை இணங்கண்டு செயற்படுத்துவது சிறப்பானது என்று தெரிவித்த அரசாங்க அதிபர்-  திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டறிந்து கொண்டார்.
சிறுவர்களை பாதுகாப்பது ஒரு துறை சாராரது கடமையென்று புறந்தள்ளிவிட முடியாது என்றும் குறிப்பாக பிரதேச செயலக ரீதியாக கிராமங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றவர்களுக்கும் தமது கடமைகளுக்கு புறம்பாக இதனையும் அவதானிக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா- கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர்- பிரதேச செயலாளர்கள்- சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள்- சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *