Breaking
Sun. May 5th, 2024

இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் கடற்போக்கு வரத்து போன்றவற்றை ஊக்குவிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்வில் நடன கலைஞர்கள், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் சீனா ஜனாதிபதி வாகனப்பேரணியாக கொழும்பை நோக்கி பயணித்தார். வழி நெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 28 வருடங்களுக்கு பின்னர் சீனா ஜனாதிபதி ஒருவரின் விஜயம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கையுடன் 20 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். சீனா ஜனாதிபதி அவரது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுகளை மேற்கொண்ட பின்னர் இருவரும் இணைந்து நுரைச்சோலையின் லக்விஜய மின்திட்டத்தின் இரண்டாவது பகுதியை ஆரம்பித்துவைத்துள்ளனர்.ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இதனை அவர்கள் திறந்துவைத்துள்ளனர்.

இன்று இந்தியாவிற்கான தனது விஜயத்திற்கு முன்னதாக சீனா ஜனாதிபதி கொழும்பு துறைமுகத்திற்கு செல்லவுள்ளார்.

இதேவேளை, அவரது இந்த விஜயத்தின்போது கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்தாகியுள்ளது. சீனா துறைமுக நிறுவனம் இந்த திட்டத்தில் முதற்பகுதிக்கு 1.3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

இதேவேளை, இரு நாட்டு தலைவர்கள் மத்தியிலான சந்திப்பின்போது சீனாவின் பட்டுப் பாதை திட்டத்திற்க்கு மஹிந்த ராஜபக்­ தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் சீனா அளித்துவரும் ஆதரவிற்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *