Breaking
Tue. May 7th, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தன்னால் ஏதாவது ஒரு கட்சியிலேயே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு கவலையையும், நிம்மதியையும் அளித்துள்ளது. இடதுசாரி இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்ததால் எனக்கு இந்த முடிவு கவலையளிக்கின்றது.
கடந்த சில வாரங்களாக இரு தோணியில் கால்வைத்த மனோநிலையில் நான் காணப்பட்டேன்,இந்த நிச்சயமற்ற நிலை நீங்கியதால் நான் நிம்மதியாக உள்ளேன் நான் அளித்த அழுத்தங்கள் காரணமாகவே துமிந்த சில்வாவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது உண்மை,
எனினும் எனது போராட்டம்  தனிப்பட்டவொன்று இல்லை என்பதால் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன்  சேர்வதை தவிரவேறு வழியிருக்கவில்லை
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின்  பட்டியலில் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான  பலர் உள்ளனர். மேலும் என்னால் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றமுடியாது என்பதால் அதிலிருந்து அக்கட்சியிலிருந்து வெளியேறுவதை தவிரவேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *