Breaking
Fri. May 17th, 2024

முன்பள்ளி ஆசிரியர்களால்
ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளீர் தின விழாவானது பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் பதவி வகிப்போர் பங்குபற்றலுடன் இடம்பெற்றது

இந் நிகழ்வில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இஸ்தாபகத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

பெண் இனத்தின் ஆற்றல் தியாகம்  மற்றும் தாய்மையை கெளரவப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் “உண்மையில் இந்த இடத்தில் ஒரு விடயத்தை கூறிக்கொள்வதில் நான் பெருமை படுகின்றேன் அதாவது நான் இன்று ஒரு மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றேன் அனைவரும் மதிக்கத்தக்க ஒரு உயர் பதவியில் இருக்கின்றேன்  ஆனால் எனக்கு ஆரம்பக்கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் இன்றும்கூட அதே ஆரம்ப பாடசாலை ஆசிரியராகவே இருக்கின்றார் உண்மையில் அவர்களை பாராட்டுவதற்கு வார்த்தையே கிடையாது உண்மையில் அவர்களுடைய சேவை அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தாயை விடவும் சிறந்ததாக செயல்பட்டு வருகின்றார்கள் அந்தவகையில் நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம் நாங்கள் எந்த ஒரு உயரத்தை எட்டினாலும் அது ஜனாதிபதியாக இருக்கலாம் ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம் அல்லது உலகே போற்றும் அளவிற்கு உலகப்புகழ் பெற்றவர்களாக இருக்கலாம் யாரும் ஆரம்ப கல்வி கற்றுத்தந்தவரை மறக்க முடியாது அந்தவகையில் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமை அடைகின்றேன் அது மட்டுமல்லாது எமது ஆசிரியர்கள் ஒரு பாரிய பிரச்சனை ஒன்றை முன்வைத்திருந்தார்கள் அதாவது சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சனை இன்னும் சில பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது இந்த விடயத்தினை வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற கல்வி அமைச்சர்கள் கருத்திட்கொண்டு இந்த விடயத்தை சரியாக செய்து கொடுக்க வேண்டும் ஏனென்றால் இன்று சாதாரண ஒரு குடும்பம்  ஒரு வேலை உணவு அதாவது சோறும் சம்பலும் உண்பதாக இருந்தால்கூட இன்று அவர்கள் பெரும் சம்பளத்தினை விட செலவு அதிகமாகவே இருக்கின்றது இன்று 4000ம் ரூபா சம்பளம் எடுத்து வரும் முன்பள்ளி ஆசிரியர்கள் 30 வருடத்திற்கு முன்பும் இப்படியான குறைந்த சம்பளமே  பெற்றிருக்கின்றார்கள் இந்த இடத்தில் வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் வலயக்கல்வி பணிப்பாளர் இருக்கின்ரீர்கள்  நீங்களும் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு எமது முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்திற்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் ”
என தனதுரையில் தெரிவித்தார்

மேலும் இந் நிகழ்வில்  போக்குவரத்து மற்றும் கைத்தொழில் மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன் வலயக்கல்வி பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி பணிப்பாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் கலந்து சிறப்பித்தனர்17579967_1144196002370013_140864525ds7_n 17577635_1144196075703339_374015093_n 17555511_1144196092370004edd_338785014_n 17555217_1144195959036684_1268293239_n

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *