Breaking
Fri. May 17th, 2024

பத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்கள் ஒன்றி­ணைந்து ஜன­நா­யக தமிழ்த் தேசிய முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன.

தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்றெ­டுக்க இந்த அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர்.

இதில் ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலை கூட்­டணி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி., பிர­பா­ க­ணே­சனை ஸ்தாபகத் தலை­வ­ரா­கவும் ந.கும­ர­கு­ரு­ப­ரனை தலை­வ­ரா­கவும் கொண்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ப.உத­ய­ரா­சாவை தலை­வ­ராகக் கொண்ட சிறி­ரெலோ, இரா.பிர­பா­க­ரனை தலை­மை­யாகக் கொண்ட ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஈழ விடு­தலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி, சர்­வ­தேச இந்து குருமார் அமைப்பு, ஜன­நா­யக மறு­சீ­ர­மைப்பு இயக்கம் ஆகி­யன இணைந்­து­கொண்­டுள்­ளன.

ஜன­நா­யகத் தமிழ்த் தேசிய முன்­ன­ணியின் ஆரம்பம் குறித்து அறி­விப்­ப­தற்­கான செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று புதன்­கி­ழமை பம்­ப­லப்­பிட்டி ஓசன் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இந்தச் சந்­திப்பில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ.ஆனந்­த­சங்­கரி, ஈ.பி.டி.பி. கட்­சியின் செய­லாளர் டக்ளஸ் தேவா­னந்தா, ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் பிரபா கணேசன், சிறி­ரெலோ கட்­சியின் செய­லாளர் ப.உத­ய­ராசா உட்­பட பலரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந்த அமைப்பு தற்­போ­தைக்கு ஒரு அர­சியல் கட்­சி­யாக செயற்­ப­டாது. தமிழ் மக்கள் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்­பாக மாத்­தி­ரமே இருக்கும். தேவை ஏற்­படின் எதிர்­வரும் தேர்தல் காலத்தின் போது அர­சியல் கட்­சி­யா­கவும் உரு­வெ­டுக்கும் என்று ஜன­நா­யகத் தமிழ் தேசிய முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் பிரபா கணேசன் தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் தமிழ் மக்­களின் உரி­மைக்­காக குரல் கொடுக்­காது தற்­போது மௌனித்­துள்­ளன. இந்த வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­கா­கவே நாம் புதிய கூட்­ட­ணி­யினை ஆரம்­பித்­துள்ளோம். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்­தி­செய்யத் தக்க வகையில் நாம் குரல் எழுப்­புவோம் என்றும் அவர் செய்­தி­யாளர் மாநாட்டில் சுட்­டிக்­காட்­டினார்.

தற்போது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் குரல் எழுப்ப ஒரு அமைப்பு இல்லாமையினாலேயே நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *