Breaking
Fri. May 17th, 2024

பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்று கூடி சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது எடுக்­கப்­படும் தீர்­மா­னங்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிறி­தொரு தினத்தில் சந்­தித்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கோர­வுள்­ளனர்.இது தொடர்பில் ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவின் தலை­வரும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.பௌசி­யிடம் கருத்து வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

விசே­ட­மாக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­க­வுள்ள பாதிப்­புகள், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் , புதிய தேர்தல் முறையும் அதனால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு ஏற்­ப­ட­வுள்ள சவால்கள், புனித குர்ஆன் மற்றும் இஸ்லாம் சில தரப்­பி­னரால் அவ­ம­திக்­கப்­ப­டு­கின்­றமை போன்ற விட­யங்கள் விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன. சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­களில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சியல் பேதங்­க­ளின்றி ஒன்­று­ப­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மேற்­கொள்ளும் தீர்­மா­னங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்படும். இது பற்றி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *