Breaking
Fri. May 3rd, 2024

ஜனாதிபதித் தேர்தலில் அரச தரப்புக்கு ஆதரவ ளிக்கப்போவதில்லை என்றும், மஹிந்த ராஜபக்­வின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் கூறினார்.

தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசுக்கு தெளிவானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதி பதி முறைமையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

நாம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரானவர்கள் அல்லர். அவரின் கொள்கைளுக்கு எதிராகவேச் செயற் படுகின்றோம். அவற்றை தோற் கடிப் பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

மஹிந்த சிந்தனையில் நிறை வேற்று ஜனாதிபதி முறைமையில் திருத்தம் கொண்டுவருதல் என்பது பற்றி கூறப் பட்டுள்ளது. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் இந்த உறுதி மொழி வழங் கப்பட்டது. ஆனால், இன்னும் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

எனவே, அடுத்தமுறையில் ஜனா திபதியை எம்மால் ஆதரிக்க முடியாது. எமக்கு தெளிவானதொரு பதில் அவ சியம். நிறைவேற்று ஜனாதிபதி முறை மை முழுமையாக ஒழிக்கப்பட வேண் டும் என கூறி யோர் இன்று விழுந்த டித்துக்கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

நிறைவேற்று முறைமையில் மாற் றம் கொண்டுவருவதாக மஹிந்த சிந்த னையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், அவரும் “என்.ஜீ. ஓ. ‘ காரரா? எனவே, எமக்கு எதிராக விமர் சங்களை முன்வைப்போர் முதலில் விடயங்களை கற்றறிய வேண்டும்.

எமக்கு நாடு முக்கியம். நாட்டு மக்கள் முக்கியம். அவர்களை மையப் படுத்தியே எமது அரசியல் நடவடிக் கைகள் அமையும். அச்சுறுத் தல்க ளுக்கு அடிபணியமாட்டோம்.

எமக்கு எதிராக இன்று சூழ்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. சில வேளை, சிறையில்கூட போடலாம். அவ்வாறு போட்டாலும் பரவாயில்லை, எனக்கு சிறிய அறையயான்று வழங் கினால் போதும். புத்தகமாவது எழு தலாம்.

அதேவேளை, சனி பெயர்ச்சி இலங்கைக்கும் நல்லதில்லை என்று சிலர் கூறுவதையும் தற்போது கேட்க முடிகின்றது என்றும் அவர் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *