Breaking
Sat. May 4th, 2024
சர்வதேச ரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஷா வழங்கியமை தேசத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் கடுமையாக சாடினார்.
மியன்மாரில் இயங்கி வரும் கடும் போக்கு அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரரிர் பொதுபலசேனா அமைப்பி;ன் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருக்கின்றமையானது இந்த நாட்டின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக அபிவிருத்திக்கும் நாட்டில் சேவைகளை மேற்கொள்வதற்கும் வருகின்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களை நாட்டுக்கு அனுமதிக்காமல், அவர்களால் நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந் நிறவனங்களுக்கான வீஷாவை அரசாங்கம் இரத்த செய்தது. அத்தோடு இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபடுவதற்காக நாட்டுக்கு வந்த வெளிநாடுகளை சேர்ந்த  தப்லீஃ ஜமாஅத்தினரை அரசு உடணடியான வெளியேற்றியது.
இந்நிலையில் நியுயோர்க்கின் டைம்ஸ் சஞ்சிகையினால் தீவிரவாதியாக சுட்டிக்காட்டப்பட் மியன்மாரின் அசின் விராது தேரரை நாட்டுக்கள் அனுமதித்தமை பெரும் குற்றமாகும்.
இதேவேளை, மியன்மாரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொண்டு குவிப்பதற்கு காரணமாக இருந்தவரை இலங்கைக்கு அழைத்துள்ளமையல் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக மத்திய கொழும்பில் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இங்கு இவ்வாறான கூட்டங்களுக்கு அனுமதியளித்ததிருப்பது தவறாகும்.
இந்நிகழ்வையடுத்து நாட்டில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படின் அரசாங்கமே அதற்கு  பொறுப்பு கூற வேண்டும்.
ஏற்கனவே பொதுபலசேனா அமைப்பினர் அளுத்கமயில் நடத்திய கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான இனவாத கருத்துக்களை பறப்பியதையடுத்து அங்கு பெரும் வன்முறைகள் வெடித்தன. இந்நிலையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் கொழும்பில் மீண்டுமொரு கூட்டமொன்றை நடத்த அனுமதி வழங்கியமை வரலாற்று தவறாகும். அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டஈடை இன்னும் இந்த அரசாங்கத்தால் செலுத்த முடியாதிருக்கின்றது. இந்நிலையில் இன்னுடிமாரு வன்முறைக்கு இடமளிக்கும்வகையில் பொது பல சேனாவுக்கு கொழும்பில் கூட்டமொன்றை நடத்துவற்கு அனுமதித்மை பெரும் குற்றமாகும்.
இதேவேளை ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களுக் எதிராக பொது பல சேனா வன்முறைகளை கட்டவிழ்த்தது. இம்முறையும் ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோது சர்வதேச தீவிரவாதியொருவரை பொது பல சேனா நாட்டுக்குள் அழைத்து வருகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்றடுத்தியுள்ளது என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *