ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.
இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார்.
ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடையை நீக்குதல் போன்ற விடயங்களுக்காக ஜேர்மனியின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒஸ்ரியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.