Breaking
Sun. May 19th, 2024

ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) ஜப்பான் பயணமாகிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹிரோட்டோ இசுமிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முதல் ஜனநாயக நிறுவனங்கள், நீதிச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், மனித உரிமைகள் என்பவற்றைப் பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

வளர்ந்து வரும் சந்தைகளின் மந்த நிலைமைகள், எரிபொருள் விலைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் அதிகரி்த்து வரும் நிச்சயமற்ற தன்மை சர்வதேச சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு சாதகமான செய்தியை வழங்குவது ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் நோக்கமாக அமையவுள்ளது. ‘ஜீ 7’ நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து ஆசிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *