Breaking
Wed. May 15th, 2024

நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் துவக்க உரை நிகழ்த்திய  ஜிம்பாவே நாட்டு அதிபர் ராபர் முகாபே, ஒரு மாதத்திற்கு முன்பு படித்த உரையை மீண்டும் படித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

அதிபர் ராபர் முகாபே தான் வாசிக்க வேண்டிய உரைக்குப் பதிலாக வேறு தவறான பழைய உரையை படிக்க ஆரம்பித்ததும், தொலைக்காட்சியின் நேரடி ஒலிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர் வாசித்த உரையானது கடந்த மாதம் ஆற்றிய உரையாகும்.  அதிபரின் செயலகத்தில் நடந்த குழப்பத்தின் காரணமாகவே தவறு நிகழ்ந்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அதிபர் உடல்நிலை பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *