Breaking
Mon. May 20th, 2024

இலங்­கைக்குக் கிடைக்­காமல் போன ஜீ.எஸ்.பி வரிச்சலு­கை­யினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்­ள­வுள்­ள­தாக கைத்­தொழில், வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரிவித்தார்.

இந்தச் சலு­கை­யினை இலங்­கைக்கு பெற்றுக்கொடுப்­பது தொடர்பில் ஆராயும் உயர் ஐரோப்பிய ஒன்­றி­யத்தின் பிரதி நிதிகள் குழு­வினர் நேற்று அமைச்சர் றிஷாத் பதி­யு­தீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஒன்­றி­யத்தின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னி­டத்தில் கருத்­து­ரைக்கும் போது-­ இ­லங்கை தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் ஏற்றுக்கொள்ளக் கூடிய மன­நி­லையில் உள்­ளது. இருந்த போதும்,இலங்கை தமது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினை வலுப்­ப­டுத்திக் கொள்ளும் வகையில் தமது நேரத்தை தற்­போது அடைந்­துள்­ளது. ஜீ.எஸ்.பி. சலு­கை­யினை பெற்­றுக்­கொள்ளும் நாடுகள் 27 வகை­யான உடன்­பா­டு­க­ளுக்கு அமைய செயற்­பட வேண்டியுள்ளது.

சிறு­வர்­களை வேலைக்­க­மர்த்­தாமை, தொழி­லாளர் மற்றும் மனி­த­வ­ளப் ­பா­து­காப்பு, என்­பன இதில் பிர­தா­ன­மா­ன­தாகும். இந்த அடிப்­படை தகை­மை­களை இலங்கை பூர்த்திசெய்­துள்­ள­தாக நாம் அறி­கின்றோம். இந்த விட­யங்கள் தொடர்பில் பேச்­சுக்­களை நடத்த பிரிஸல்ஸ் நாட்டில் இருந்து உயர் மட்டக் குழு­வொன்று இலங்­கைக்கு வந்­துள்­ளது. இருதரப்பு பேச்சுவார்த்­தை­யினை தொடர்ந்து அவர்கள் வழங்கும் அறிக்­கையின் அடிப்­ப­டையில் ஏப்ரல் மாதம் இன்­னு­மொரு குழு­வினர் இலங்­கைக்கு வரு­கை­த­ர­வுள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் இதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டு­வது தொடர்பில் நட­வ­டிக்கை வழங்­கப்­படும்.

ஜீ.எஸ்.பி. சலுகை இலங்­கைக்குக் கிடைக்­காமல் போனதால் இலங்­கையின் ஆடை உற்­பத்தித்துறையில் பெரும் இழப்­புக்­களை சந்­திக்க நேரிட்­ட­தாக சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், இந்த ஜீ.எஸ்.பி. கிடைப்­பதில் இலங்கை பொரு­ளா­தார ரீதியில் வலு­மிக்­க­தாக மாறும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும் என்றும் குறிப்­பிட்டார். அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் இந்தச் சலுகை கிடைப்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்று என தெரி­வித்த அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்,2014 ஆம் ஆண்டு இலங்­கைக்­கும் -­ஐ­ரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கும் இடை­யி­லான வர்த்­தக கொடுக்கல் வாங்­கள் ­அ­மெ­ரிக்க டொலர் மில்­லியன் 5.07 ஆகும். முன்­னைய வரு­டங்­களை பார்க்­கிலும் அது 3.6 சத­வீ­த­மாகும். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இலங்­கைக்கு கிடைக்கும் போது இலங்கையில் இருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியின் அதிகரிப்பு பன்மடங்காகும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் இதன்போது ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடத்தில் எடுத்துரைத்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *