Breaking
Wed. May 8th, 2024
இன­வாதம் பேசும் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வரும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் அர­சாங்கம் மேற்­கொள்ளும் நிர்­ண­யிக்­கப்­பட்ட சந்­திப்பு செயற்­றிட்­டங்கள் (Engagement Process) பய­னுள்­ள­வை­க­ளாகத் தெரிந்­தாலும் இறு­தியில் தீங்­கி­னையே (Impunity) விளை­விக்கும் என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.
நல்­லி­ணக்கம் தொடர்­பாக கடும்­போக்­கு­வாத பௌத்த தேரர்­க­ளுடன் அர­சாங்கம் மற்றும் ஜனா­தி­பதி மேற்­கொண்­டு­வரும் கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்,
ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ரான கருத்­துக்­க­ளையே தொடர்ந்து கூறி­வ­ரு­பவர். புனித குர்­ஆ­னையும் அல்­லாஹ்­வையும் அவ­ம­தித்­தவர்.
இவ்­வா­றா­ன­வர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தனால் நல்­லி­ணக்­கத்­துக்கும் இன நல்­லு­ற­வுக்­கு­மான சூழ­லினை உரு­வாக்க முடி­யாது. இறு­தியில் அது தீங்­கி­னையே    விளை­விக்கும். முஸ்­லிம்­க­ளுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று எதிர்­பார்க்­க­மு­டி­யாது.
தீவி­ர­வாதக் கருத்­துள்­ள­வர்­களை ஜன­நா­யக நீரோ­டைக்குள் கொண்டு வரு­வ­தென்­பது சிர­ம­மான காரி­ய­மாகும். நீதி­மன்­றங்­களில் பல வழக்­கு­களை எதிர்­கொண்­டி­ருப்­ப­வர்கள் நல்­லி­ணக்­கத்­துக்கும் சக­வாழ்­வுக்கும் ஆலோ­சனை கூறு­ப­வர்­க­ளாக இருக்க முடி­யாது.
எனவே நல்­லி­ணக்க முன்­னேற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமக்­குள்ள பிரச்­சி­னைகள் அனைத்தும் தீர்க்­கப்­பட்­டு­விடும் என நாம் ஏமாந்து விடக்­கூ­டாது.
ஆர்.ஆர். ரி. அமைப்பு பள்ளிவாசல்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தயாராகவே உள்ளது. பள்ளிவாசல்கள் உதவி கோரினால் மாத்திரமே தேவையான உதவிகளும் ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *