Breaking
Sat. Apr 27th, 2024

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட் டணி அரசு அடுத்த நிதி யாண்டுக்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ இதை பிற்பகல் 1 .30 மணிக்கு சபையில் சமர்ப்பித்து உரை யாற்றுவார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால், மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வானலவில் கனவு கள் தரும் வரவுசெலவுத்திட் டத்தையே அவர் சமர்ப்பிப் பார் என எதிர்பார்க்கப்படு கின்றது.

ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான அரசின் இந்த பத்தாவது வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பின் மீதான விவாதம் நாளை தொடக்கம் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நடைபெற்று அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இம்முறை வரவு-செலவுத்திட்டத் தின் இரண்டாம் கட்ட வாசிப்பின் மீதான விவாதத்துக்கு ஏழு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்ச மாகும்.

மூன்றாம் கட்ட வாசிப்பின் மீதான குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதிவரையான 17 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற்று 24ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும்.

கடந்த ஒன்பது வருடகாலமாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி தனக்கி ருக்கும் ஆதரவில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு சரிவுநிலையையும் சரிக்கட் டும் எதிர்பார்ப்பை நோக்கியதாக இந்த வரவு செலவுத்திட்டம் அமையும் என ரொய்ட்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள் ளது.
நிதி அமைச்சராகவும் விளங்கும் 68 வயதுட டைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ இம்முறை வரவு – செலவுத்திட்டத்தின் தொனிப்பொருளானது “தடுத்து நிறுத்த முடியாத இலங்கை’ என அமையும் என்று நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இம்முறை வரவுசெல வுத்திட்டமானது நாட்டின தும் மக்களதும் தர நிலையை உயர்த்துகின்ற பல்வேறு யோசனை களைத் தாங்கியதாக அமையும் எனவும் தேர் தலை நோக்காகக் கொண்டதாக வரவுசெலவுத்திட்டம் அமையமாட்டா தெனவும் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி கடந்த ஞாயிறன்று அரச ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.

நடப்பாண்டில் உள்ள 7.8 சதவீதத் திலிருந்து 2015ஆம் ஆண்டில் பொருளாதர வளர்ச்சி 8.2 சதவீதமாக அமையும் என ராஜபக்­ எதிர்பார்ப்பு வெளியிட்டுள் ளதுடன் நடப்பாண்டில் மொத்த உள் ளாட்டு உற்பத்தியில் 5.2 வீதமாக வுள்ள வரவுசெலவுத் திட்ட இடைவெ ளியை அடுத்தாண்டில் 4.4 சதவீதமாக குறைக்கும் எதிர்பாப்பையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.

மக்கள் மத்தியிலான தமது செல்வாக்கை அதிகரிக்கும் முனைப்புடன் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் பெருமெடுப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தனது அர்ப்பணிப்பை மீள வெளிப்படுத்துவதுடன் அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு விவசாயிகளுக்கான குறைந்த வட்டியிலான கடன்கள் இராணுவத்தினரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புச்செலவில் அதிகரிப்பு ஆகியவற்றை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என ஈரோஏசியா குழுமத்தைச் சேர்ந்த ஆய்வாளரான சாஸா ரைஸர் கொஸிற்ஸ்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

தனது மீள தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் வகையில் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மக்களைக் கவரும் வகையிலான முன்முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொள்வார் எனச் சுட்டிக்காட்டும் கொஸிற்ஸ்கி புதிய கட்ட செலவீனங்கள் குறித்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும்தொகையை 4.4 சதவீதம் என்ற வரையறைக்குள் வைத்திருக்க அரசு தொடர்ந்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதானது உடனடியாக புதிய கட்ட அறிவிப்புக்கள் நடை முறைப்படுத்தப்படமாட்டாதென்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *