ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.