தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.