Breaking
Sun. May 19th, 2024

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது.

சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை சந்தித்து வருகிறார்கள். சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நகர்மயமாதலும், திட்டமிடாத வளர்ச்சியும்தான் சென்னை நகரத்துக்குள் வெள்ளம் வருவதற்குக் காரணமாக உள்ளன. சென்னைக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியாவின் மற்ற நகரங்களுக்கான பாடமாக உள்ளது. பேரிடர் மேலாண்மை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில், மாநகர அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். கழிவுநீர் அகற்றுவதில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் வகையில் நீண்டகால திட்டம் கொண்டு வரவேண்டும்.

இதுபோன்ற இயற்கை பேரிடர் வரும்போது அதை எதிர்கொள்ள ஒவ்வொரு தனிநபரும் தயாராக இருக்க வேண்டும்.

அவசர காலங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது, எஸ்.எம்.எஸ். மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பருவகாலங்களில் வெள்ள தடுப்பு திட்டங்கள் கொண்டு வரப்படுவதோடு, பாதிக்கப்படக் கூடிய பகுதிகளை கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த தொடர் மழை தொழில்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழகத்து மக்களையும் தொழில்களையும் காப்பாற்றும் வகையில் மறுவாழ்வுக்கான நிதியை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *