Breaking
Fri. May 3rd, 2024

கப்பல்துறை கிராம மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – கப்பல்துறை கிராமத்தில் நேற்று முன்தினம் (11) அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கப்பல்துறை கிராமத்தின் 3/2 பங்குகளை துறைமுகங்கள் அதிகாரசபை கபளீகரம் செய்துள்ளது. எனவே, மக்களுடைய தனியார் காணிகளை கபளீகரம் செய்வதனையும், எல்லையிடுவதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திருகோணமலைக்கு வந்தபோது மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நான் கோரியிருந்தேன். ஆனால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரிடத்தில் நாம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் கப்பல்துறை, முத்துநகர் ஆகிய கிராமங்களின் மக்கள் வீதியில் இறங்கி போராடி அரசாங்கத்தை அசுத்தப்படுத்தவில்லை.

மாறாக தங்களது உரிமைகளுடன் வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோருகின்றார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் மூன்று இன மக்களும் இணைந்தே கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

Related Post